எமது அதிநவீன அடுத்த தலைமுறை வலையமப்பு மூலமாக (NGN) நாம் ஒளியியல் இழைய அனுப்பீட்டு வலையமைப்பில் கட்டப்பட்ட உயர் தரமான குரல்வழி சேவைகளை வழங்குகிறோம். செப்பு மற்றும் இழைய கேபிள்கள் இணைந்த எமது ஒப்பற்ற கம்பியிணைப்பு பெறுவழி வலையமைப்பினால் நாம் அதி உயர் தரமானதும் மிகவும் நம்பிக்கையானதுமான குரல்வழிச் சேவைகளை எமது வணிகமுயற்சி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.
எமது வணிகமுயற்சி குரல்வழிச் சேவையானது, உங்கள் கேள்விகளையும் சிக்கலான வணிக குரல்வழித்தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக, NGN உட்கட்டுமானம் மூலமாக ஒருங்கிணைக்கும் தீர்வுகளை வழங்குகிறது.
பின்வருவனவற்றை அடிப்படையாக்க் கொண்டு உங்கள் தேவைகளுக்கேற்ப பொருத்தமான பொதிகளை நீங்கள் தெரிவுசெய்யலாம்.
இச்சேவையானது IP PABXs, IP Phones, PBXs, KTS போன்ற வாடிக்கையாளர் நுண்ணறிவுக் கருவிகளுக்கான இணைப்புகையை வழங்குகின்றது. உங்கள் வணிகமுயற்சிகளில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் குரல்வழி நெரிசலுக்குப் பொருத்தமான பின்வரும் வணிக நேர்தடங்களை வழங்குகிறது
ஊடாடு குரல்பதிவு (Interactive Voice Response (IVR) சேவையானது, வணிகமுயற்சிகள் குரல்வழி தொலைபேசித்தொடர்பு செய்திகளை நேரடியாகவும் பதிவுசெய்யப்பட்டும் வழங்குவதற்கு வகைசெய்கிறது. வணிகமுயற்சிகள் தமது வணிகங்களுக்கு மேலதிக வருமானத்தை ஈட்டுவதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியுடன் உயர்கட்டண இலக்கங்களைப் பயன்படுத்தக்கூடும். ஸ்ரீலரெ அழைப்புகளை ஊடாடு குரல்பதிவு (IVR) )வழங்கிக்கு அனுப்பி, அழைப்புகள் குறிப்பிட்ட IVR வழங்கியை அடைந்ததும் ஒலிக்கப்படும் குறிப்பிட்ட செய்திகளுக்கான பதில்வினையை பாவனையாளர்கள் DTMF மூலமாக கொடுப்பார்கள்.
இச்சேவையானது பொதுவாக Hotline service / Toll Free service (அவசர அழைப்புச் சேவை) என அழைக்கப்படும். வாடிக்கையாளர்கள் இலவசமாக அழைக்கலாம். விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கட்டளைகளை இலவச தொலைபேசி அழைப்புகள் மூலம் ஏற்று தமது பொருட்களின் விற்பனையை அதிகரிக்கின்றன. அதிகரிக்கும் வாடிக்கையாளர் அழைப்புகளின் பதில்வினையாக, வணிகமுயற்சிகள் தமது அழைப்பு நிலையங்கள் மற்றும் தொடர்பு நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்தமுடியும். Business Hotline சேவையானது மேற்குறிப்பிட்ட எந்தவொரு வணிக நேர்தடங்கள் சேவைகள் மூலமாகவும் உங்கள் வணிகங்களுக்கு வழங்கப்படும். மேற்சொன்ன சேவைகளுக்கான கட்டணங்கள் பின்வருவனவற்றை அடிப்படையாகக்கொண்ட்து:
Trunking Services
Bulk SMS
SLTMobitel EZ Messenger is a feature-rich Bulk SMS service to cater for business SMS requirements under your company brand name.
How it works ?
Any business customer who wishes to have their own SMSC platform with a range of enterprise-level features can use eZ Messenger.