Please refer SLT Broadband Terms and Conditions.
You can use a suitable rechargeable power adaptor to power up your devices. Visit eTeleshop for online purchases.
அகலப்பட்டை (அல்லது Broadband) என்பது, இணையத்தை இணைக்கும் ஒரு முறையாகும். அகலப்பட்டை (அல்லது Broadband) என அழைக்கப்படும் இது, முன்னர் பொதுவாக Narrowband என அழைக்கப்பட்ட பழைய இணைப்புகளுடன் ஒப்பிடும்போது, ஒரு அதிவேக இணைய இணைப்பாகும்.
ADSL என்பது, செப்புக்கம்பியுடனான தொலைபேசி வலையமைப்பினைப் பயன்படுத்தும் ஒரு அகலப்பட்டை இணைப்புத் தொழில்நுட்பமாகும். ADSL ஆனது, ஒரு தொலைபேசி இணைப்பில் பலவகையான அலைவரிசைகளைப் பயன்படுத்தி, உங்கள் சாதாரணமான 56k மொடெம் வழங்கும் வேகத்தைவிட அதிவேகமான செயற்பாட்டை வழங்கும். (10 இலிருந்து 140 மடங்குகள் வேகமானது). நீங்கள் இணையத்தையும் தொலைபேசியையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.
ஸ்ரீலரெ அகலப்பட்டை ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் அதிவேக, தடையற்ற இணையத்தை வழங்குகிறது.
பின்வரும் காரணிகளைப் பொறுத்து, நீங்கள் அனுபவத்தில் பெறும் வேகத்தின் உண்மையான தன்மைகள் குறிப்பிடத்தக்க அளவில் மாறக்கூடும்:
எனவே, மேற்சொன்ன காரணிகள், கணக்கீட்டு மதிப்பிலிருந்து உங்கள் இணையவேகத்தைக் குறைக்கும் என்பது உண்மை. விளம்பரப்படுத்தப்பட்ட அலைவரிசை அளவை அறிந்துகொள்வதற்குப் பின்வரும் சார்விதிகள் பயனுள்ளதாக இருக்கக்கூடும்.
அனுப்பும் தரவுகளின் உச்ச எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் எந்தவொரு அகலப்பட்டை இணைப்பினதும் கொள்ளளவே அலைவரிசை அளவு ஆகும்.
சில சமயங்களில் பல தொழில்நுட்ப காரணங்களால் பொதிகளில் விளம்பரப்படுத்தப்பட்டது போல சந்தாதாரர்கள் உச்ச அலைவரிசை அளவினைப் பெறுவது கடினம். அப்படியான சூழ்நிலையில் ஒரு தொழில்நுட்ப மதிப்பீடு செய்தபின், வாடிக்கையாளர்களுக்கு முடிந்தவரையில் உச்ச அலைவரிசை அளவு வழங்கப்படும். ஆனபோதிலும், உச்ச அலைவரிசை அளவானது, ‘குறைந்த அலைவரிசை அளவு’ என குறிப்பிடப்படும், அனுமதிக்கப்பட்ட குறைந்தளவு அலைவரிசையை விட அதிகமானால், அந்தக்குறிப்பிட்ட பொதியானது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படமாட்டாது. அதற்குப்பதிலாக, வாடிக்கையாளரின் இணைப்பின் தன்மைக்கு ஏதுவான இன்னொரு பொருத்தமான பொதி வழங்கப்படும்.