Light
Dark
Pay your bill

வாடிக்கையாளர் அனுபவம்

all you want

எமது வாடிக்கையாளர்களை மனதில்கொண்டு, நாம் தொடர்ந்து எமது உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் அதேநேரம், வாங்கும்திறன், பெறுவழிவசதி போன்றவைகளில் கவனஞ்செலுத்தி ஒவ்வொரு வீடும் ‘இணைப்பில்’ இருப்பதையும் அறிவு மற்றும் தகவல்களை யாவரும் பெற்று மகிழ்வதையும் உறுதிசெய்கிறோம். எமது வாடிக்கையாளர்களை  நாம் எமது பங்காளர்களாகவே கருதுகிறோம். அதன்படி, ‘புதுமையானதும் உற்சாகத்தைத் தருவதுமான தொலைத்தொடர்பு அனுபவங்களை ஆர்வம், தரம் மற்றும் அர்ப்பணிப்புடன் உங்களுக்கு வழங்கும் நம்பிக்கையானதும் நிரூபிக்கப்பட்டதுமான பங்காளர்’.

வாடிக்கையாளரை மையப்படுத்தல் ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் பிரதான விசை. நாம் தொடர்ந்தும் எமது வாடிக்கையாளர்களை முன்னிலைப்படுத்தியே எமது திட்டங்கள், நடவடிக்கைகளை முழுமாற்றம் செய்கிறோம். ISO 9001:2008 தரசான்றிதழ் நிறுவனத்தின் பெரும்பாலான பகுதிக்கு கிடைத்துள்ளதுடன் கம்பனி முழுவதற்கும் நீட்டிக்கப்பட்டும்.

ஸ்ரீலரெ வாடிக்கையாளருக்கு அளிக்கும் வாக்குறுதி

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவது ஸ்ரீலரெவின் சேவைச் சார்விதியை வரையறுக்கும் அதேநேரம், கம்பனியானது சமூகப்பொறுப்புள்ள வகையில் உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. வாடிக்கையாளருக்கு எப்போதும் சிறப்பான சேவைகளை உறுதிசெய்யும் ஸ்ரீலரெ, எல்லா உற்பத்திப்பொருட்களையும் மேம்படுத்துவதில் சுற்றுப்புறச்சூழல் விதிகள் மற்றும் ஒழுங்குமுறையான கொள்வனவு நடைமுறைகளைப் பின்பற்றுவதைக் கடைப்பிடித்துவருகிறது. தெளிவான நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் ஸ்ரீலரெயின் திறமையான கொள்வனவுப்பயிற்சிகள், சகல உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகள் எல்லா முக்கியமான சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத்தரங்களுக்கமைவாக இருப்பதை உறுதிசெய்யும் வண்ணம் ஆபத்துக்குதவும் பொறிமுறைக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத்தரங்களுக்கமைவான ஸ்ரீலரெயின் உறுதியான நடவடிக்கை காரணமாக வாடிக்கையாளரிடமிருந்து எந்தவிதமான முறைப்பாடுகளோ சம்பவங்களோ பதிவிடப்படவில்லை.

.

ஒரு உற்பத்திப்பொருளின் ஆயுட்காலத்திற்கேற்பவும் நுகர்வோர் சந்தையில் அதன் உகந்த தன்மைக்கேற்பவும் அவற்றின் செயற்பாடுகள் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த விழைவுகள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் மதிப்பீடு செய்வதால், வாடிக்கையாளர் நலன் கருதி உற்பத்திப்பொருள் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. எமது உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகளை கூட்டாண்மை இணையதளம், தொடர்பு நிலையம், முன் அலுவலகங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர் மையங்களின் மூலம் பெறலாம்.

எல்லாவற்றையும் உள்ளடக்கிய வகைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் கொள்கையின் மூலம் ஸ்ரஒழுங்குறுத்தல் மற்றும் வெளிப்படுத்தல்கள் யாவும் அவற்றைப் பின்பற்றியதாயிருப்பதை ஸ்ரீலரெ உறுதிப்படுத்துகிறது. எனவே, விதிமுறைகள் மீறப்பட்டமைபற்றி எந்தவிதமான முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்படவில்லை.  

வாடிக்கையாளர் சேவையின் அடுத்த மட்டம் அறிமுகம்

வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள்

  • வாடிக்கையாளருடன் வெளிக்கள ஊழியர்கள் அடிக்கடி நேருக்கு நேர் சந்தித்தல்.

  • கம்பனியின் இணையதளம், வாடிக்கையாளர் தொடர்பு நிலையங்கள், தொடர்பு நிலையம், சமூக ஊடகம் மற்றும் உள்ளக ஊழியர்கள் மூலமாக பின்னூட்டங்களைச் சேகரித்தல் .

  • மேற்குறிப்பிட்ட மூலங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முன்செயற்பாட்டில் ஈடுபடுதல்.

  • சில குறிப்பிட்ட வாடிக்கையாளரைத் தெரிவு செய்து அழைத்தல்.

  • ஒழுங்குறுத்தும் தேவைகளுக்கேற்ப அகலப்பட்டை சேவையின் தரத்தை அமைத்தல்.

  • வர்த்தகச்சின்ன ஆய்வுகள்.

  • காலத்துக்குக்காலம் சில தெரிவுசெய்யப்பட்ட உற்பத்திப்பொருட்கள்/ வாடிக்கையாளர் பிரிவுகளில் ஆய்வுகளை நடத்துதல்