வணிக, பொருளாதாரங்களின் வினைத்திறனுள்ள இயக்கத்திற்கு, ஒரு பலமான, நம்பிக்கையான, நாடளாவிய ததொதொ உட்கட்டுமானம் முக்கியம். தேசிய தொடர்பாடல் சேவை வழங்குனர் என்றவகையில் நாம், நாடளாவிய ததொதொ உட்கட்டமைப்பையும் நம்பிக்கையானதும் உயர்தரமானதுமான ததொதொ உற்பத்திப்பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கி, நிறுவனங்கள் தமது வணிகச்செயற்பாடுகளை வினைத்திறனுடன் செய்ய வலுவூட்டி, பொருளாதாரத்தை மேம்படுத்தி, அறிவுச்செல்வமுடையதொரு சமுதாயத்தை உருவாக்க உதவுகிறோம். அதிவேக, வாங்கும்திறனுள்ள அகலப்பட்டை இணைப்பை வழங்குவதன்மூலம், நாம் இலங்கையர்களுக்கு சமூக, பொருளாதார நன்மைகளை வழங்குகிறோம். அகலப்பட்டையை வாங்கும்திறன் கொண்டதாக ஆக்கி, சகல வதிவிடங்களையும் அதில் இணைப்பதன் பயனாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அனுசரணையாகவிருக்கிறோம். தேசிய அகலப்பட்டை வலையமைப்பு இயக்குனர் என்ற வகையில் நாம் தேசிய ஆதார வலையமைப்பு சேவைகளை வழங்கி, இலங்கையை தென்னாசியாவின் பொருளாதார மையமாக்குவதற்கான வலையமைப்பு மற்றும் செயலாற்றல்களை உருவாக்குகிறோம்.
முழுமையான அடுத்த தலைமுறை வலையமைப்பினை மீளப்பொறிமுறைப்படுத்தும் எமது முயற்சிகள் தொடர்கின்றன. அத்துடன், ஸ்ரீலரெ மட்டுமே தேசிய ஆதார வலையமைப்பு அனுமதியைப்பெற்றுள்ளதால், அதன் கொள்ளளவு கட்டமைப்பு முயற்சியில், ஆதார மையக்கட்டமைப்பினை புதுப்பித்தலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீலரெயின் மைய உட்கட்டுமான மேடையை புதுப்பித்துவரும் அதேநேரம், பாரம்பரிய வலையமைப்பு மேடைக்குப்பதிலாக, வாடிக்கையாளரை இன்னும் நெருங்கக்கூடிய ஒளியியல் இழையத்தை அடிப்படையாகக்கொண்ட ஆதார வலையமைப்பை வழங்குவதன்மூலம் NGN ஆனது இலங்கையை த.தொ.தொ இற்குத்தயாராக்குகிறது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தும் சபையின் அனுமதிப்பத்திரத்திற்கான நிபந்தனைகளுக்குட்பட்ட NGN புலப்பெயர்வு, ஸ்ரீலரெயின் தொழிற்பாட்டு அனுமதிப்பத்திரம் மேலும் 10 வருடங்களுக்கு நீடிக்கப்படுவதற்கு உதவியுள்ளது
வாடிக்கையாளர் அடித்தளத்தின் வளர்ச்சி